அகநானூறு - 125. பாலை
அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ, நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி இரங் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய், வை வால் ஓதி மைஅணல் ஏய்ப்பத் |
5 |
தாது உறு குவளைப்போது பிணி அவிழ, படாஅப் பைங் கண் பா அடிக் கய வாய்க் கடாஅம் மாறிய யானை போல, பெய்து வறிது ஆகிய பொங்கு செலற் கொண்மூ மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர, |
10 |
பனி அடூஉ நின்ற பானாட் கங்குல் தனியோர் மதுகை தூக்காய், தண்ணென, முனிய அலைத்தி, முரண் இல் காலை; கைதொழு மரபின் கடவுள் சான்ற செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் |
15 |
விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான் வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த பெரு வளக் கரிகால் முன்னிலைச் செல்லார், சூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த |
20 |
பீடு இல் மன்னர் போல, ஓடுவை மன்னால் வாடை! நீ எமக்கே. |
தலைமகன் வினை முற்றி மீண்டமை உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. -பரணர்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 125. பாலை , இலக்கியங்கள், அகநானூறு, பாலை, வால், அன்ன, சங்க, எட்டுத்தொகை