அகநானூறு - 104. முல்லை
வேந்து வினை முடித்தகாலை, தேம் பாய்ந்து இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் வென் வேல் இளையர் இன்புற, வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது, முள் உறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா |
5 |
நல் நால்கு பூண்ட கடும் பரி நெடுந் தேர், வாங்குசினை பொலிய ஏறி; புதல பூங் கொடி அவரைப் பொய் அதள் அன்ன உள் இல் வயிற்ற, வெள்ளை வெண் மறி, மாழ்கியன்ன தாழ் பெருஞ் செவிய, |
10 |
புன் தலைச் சிறாரோடு உகளி, மன்றுழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் சீறூர் பல பிறக்கு ஒழிய, மாலை இனிது செய்தனையால் எந்தை! வாழிய! பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் |
15 |
ஆய் தொடி அரிவை கூந்தற் போது குரல் அணிய வேய்தந்தோயே! |
வினை முற்றி மீளும் தலைமகற்குத் தோழி சொல்லியது.- மதுரை மருதன் இளநாகனார்
தேடல் தொடர்பான தகவல்கள்:
அகநானூறு - 104. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, வினை, எட்டுத்தொகை, சங்க