விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள்

உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் . |
28 |
கருவிகள் ஒடுங்கும் கருத்தினை அறிவித்(து) இருவினை தன்னை அறுத்திருள் கடித்து தலமொரு நான்கும் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே. |
32 |
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே . |
36 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
விநாயகர் அகவல் - அவ்வையார் நூல்கள், காட்டி, நூல்கள், ஐந்து, அகவல், எனக்கு, விநாயகர், அவ்வையார், | , ஒன்பது, நீக்கி, ஒடுங்கும், இலக்கியங்கள், தன்னை, கருத்தினை, அறுத்தே