கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

10.கண்ணகியின் பதில்
-வாயிழையாள் பீடன் றெனவிருந்த பின்னரே- |
அதற்கு ஆராய்ந்த அணிகலன்கள் அணிந்தக் கண்ணகி,“அத்தகைய செயல் எனக்குப் பெருமை அல்ல” எனக்கூறி மறுத்துவிட்டாள்.இப்படி தேவந்தியும் கண்ணகியும் பேசிக் கொண்டிருந்த வேலையில்..
11.திரும்பி வந்தான் கோவலன்
நீடிய காவலன் போலுங் கடைத்தலையான் வந்துநம் |
65 |
கோவல னென்றாளோர் குற்றிளையாள் கோவலனும் பாடமை சேக்கையுட் புக்குத்தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தங்கண் டியாவுஞ் சலம்புணர் கொள்கைச் சலதியொ டாடிக் குலந்தரு வான்பொருட் குன்றந் தொலைந்த |
70 |
இலம்பாடு நாணுத் தருமெனக் கென்ன |
ஓடி வந்த ஒரு பணிப்பெண்,’பெருமையுடைய அரசன் போன்ற ஒருவர் நம் வாசலுக்கு வந்து கொண்டிருக்கிறார்,அவர் நம் கோவலன் தான்’,என்றாள்.
வந்த கோவலன் கண்ணகியின் பெருமைவாய்ந்த பள்ளியறைக்குள் நேராகச் சென்றான்.அங்கே தன் காதலியின் வருத்ததையும் வாடிய மேனியையும் கண்டான்.’வஞ்சக குணத்துடன் பொய் பேசுபவளோடு கூடி உறவாடியதால் நம் குலத்தவர் தேடித்தந்த மலைப்போன்ற பெரிய செல்வக்குவியலை எல்லாம் இழந்து,வறுமையில் இருக்கிறேன்.என்னுடைய இந்தச் செயல் எனக்கு வெட்கத்தைத் தருகிறது’ எனக் கூறி வருந்தினான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]