கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்
9.தேவந்தி ஆறுதல் கூறுகிறாள்
பொற்றெடீஇ கைத்தாயு மல்லை கணவற் கொருநோன்பு |
55 |
பொய்த்தாய் பழம்பிறப்பிற் போய்க்கெடுக வுய்த்துக் கடலொடு காவிரி சென்றலைக்கு முன்றில் மடலவிழ் நெய்தலங் கானற் றடமுள சோமகுண்டஞ் சூரிய குண்டந் துறைமூழ்கிக் காமவேள் கோட்டந் தொழுதார் கணவரொடு |
60 |
தாமின் புறுவ ருலகத்துத் தையலார் போகஞ்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாமொருநாள் ஆடுது மென்ற அணியிழைக்கவ்- |
பொன் வளையணிந்தவளே!நீ உன் கணவனால் வெறுக்கப்பட்டவள் அல்ல.உன் முற்பிறவியில் உன் கணவனுக்காகச் செய்ய வேண்டிய நோன்பு ஒன்றினைச் செய்யத் தவறிவிட்டாய்!
அதன் காரணமாகத் தான் இன்று கணவனைப் பிரிந்திருக்கின்றாய்.அந்தத் தீயக் குற்றம் நீங்கி விடட்டும்.காவிரி கடலுடன் கலக்கும் சங்கமத் துறையில்,மலர்கள் இதழ் விரிக்கும் நெய்தல் நிலக் கானலிடத்திலே,சோமகுண்டம் சூரியகுண்டம் என்னும் இரு பொய்கைகள் உள்ளன.அவற்றின் துறைகளில் மூழ்கியெழுந்து,மன்மதக்கோட்டம் சென்று காமதேவனை வணங்கும் பெண்கள்,தம் கணவனைப் பிரியாது ஒற்றுமையுடன் இன்பமாக வாழ்வர்.மறுபிறவியிலும் இன்பம் தரும் பூமியில் பிறந்து கணவனுடன் சேர்ந்து மகிழ்வர்.எனவே நாம் இருவரும் அங்கு ஒரு நாள் சென்று நீராடி வருவோம்” என்றாள் அழகிய அணிகலன்கள் பூண்ட தேவந்தி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]