கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

8.கண்ணகியின் கனவு
-பெறுகேன் கடுக்குமென் நெஞ்சங் கனவினால் என்கை |
45 |
பிடித்தனன் போயோர் பெரும்பதியுட் பட்டேம் பட்ட பதியிற் படாத தொருவார்த்தை இட்டன ரூரா ரிடுதேளிட் டென்றன்மேற் கோவலற் குற்றதோர் தீங்கென் றதுகேட்டுக் காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோ |
50 |
டூர்க்குற்ற தீங்குமொன் றுண்டா லுரையாடேன் தீக்குற்றம் போலும் செறிதொடிஇ தீக்குற்றம் உற்றேனொ டுற்ற உறுவனோ டியானுற்ற நற்றிறங் கேட்கின் நகையாகும்- |
அதைக் கேட்ட கண்ணகி,
‘உன் சொற்கள் ஆறுதல் தந்தாலும்,நான் என் கணவனோடு சேரவே மாட்டேன்,என நெஞ்சம் வருந்துகிறது.கனவில் நேற்றிரவு என் கணவர் வந்து,என் கையைப் பிடித்து ‘வா’ என அழைத்துச் சென்றார்.இருவரும் ஒரு பெரிய நகருக்குள் நுழைந்தோம்.அந்த ஊரில் உள்ளவர்கள் தகாத பழியை எங்கள் மீது இடுதேளாய் இட்டனர்.அப்பழியின் காரணமாக என் கணவருக்குத் தீங்கு ஒன்று ஏற்பட்டது,என்று ஊரார் வார்த்தையைக் கேட்டு நானும் அரசனின் அவைக்குச் சென்று வழக்குரைத்தேன்.அதனால் அம்மன்னனுக்கும் ஊருக்கும் தீங்கு உண்டாயிற்று.இந்தக் கனவை நினைத்தால் என்னால் பேச முடியவில்லை.
கையில் நெருங்கிய வலையகள் அணிந்தவளே!அந்தக் கனவு ஒரு தீமை நிகழ்வுக்கான குறிப்பு போல உணர்கிறேன்.அந்த தீங்கு நான் செய்த குற்றத்தினால் உண்டானதுபோல் தெரிகின்றது.இவ்வாறு குற்றம் புரிந்த பின்,நானும் என் கணவரும் பெருநன்மை அடைந்தோம்.அதைக் கேட்டால் உனக்குச் சிரிப்பு கூட வரலாம்.’
என்று தேவந்தியிடம் கூறினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]