கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

6.தேவந்தியின் வேண்டுதல்
தூமொழி ஆர்த்த கணவன் அகன்றனன் போயெங்கும் தீர்த்தத் துறைபடிவே னென்றவனைப் போ்த்திங்ஙன் மீட்டுத் தருவா யெனவொன்றன் மேலிட்டுக் கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் - |
40 |
மாசில்லாத சொற்களையே பேசும் குணமுடையவள் தேவந்தி.’என் நெஞ்சைக் கவர்ந்த என் கணவன் திர்த்தத்துறைகளில் நீராடி வரச் சென்றிருக்கிறார்,அவரை மறுபடியும் இங்கு கொண்டு வந்து என்னிடம் சேர்ப்பாயாக’ என்று சாத்தனை வேண்டுவதற்காக,நாள்தோறும் ஒரு காரணத்தைச் சொல்லி அவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தாள்.
7.கண்ணகியிடம் வருதல்
வாட்டருஞ்சீர்க் கண்ணகி நல்லாளுக் குற்ற குறையுண்டென் றெண்ணிய நெஞ்சத் தினையளாய் நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று பெறுக கணவனோ டென்றாள்- |
மங்காத புகழுடைய கண்ணகி என்னும் நங்கை,தன்னைப் போலவே கணவனைப் பிரிந்து வாடுவதை எண்ணி,தேவந்தி வருந்தினாள்.
பின் அவள் மாளிகைக்குச் சென்று,அறுகு,சிறுபூளை மற்றும் நெல் தூவி வழிபட்டு,கண்ணகியிடம்,’நீ உன் கணவனைப் பெற்று இன்பமாக வாழ்வாயாக’ என வாழ்த்தினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]