கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்

5.தேவந்தியின் துயர்
தூய மறையோன்பின் மாணியாய் வான்பொருட் கேள்வித் துறைபோ யவர்முடிந்த பின்னர் இறையோனும் |
30 |
தாயத்தா ரோடும் வழக்குரைத்துத் தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள் தேவந்தி யென்பாள் மனைவி அவளுக்குப் பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன் மூவா இளநலங் காட்டியெங் கோட்டத்து |
35 |
நீவா வெனவுரைத்து நீங்குதலுந் - |
குழந்தையாய் வந்த சாத்தான்,குற்றமில்லா மறையோனின் வாரிசாக வளர்ந்து வந்தான்.சிறந்த கல்விகேள்விகளில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றான்.பெற்றோர்கள் இறந்தபின்,அவர்களுக்குச் செய்ய வேண்டிய எல்லா ஈமக்கடன்களையும் செய்து முடித்தான்.உறவுமுறை பங்காளியரிடம் சொத்து உரிமைக்காக வழக்குத் தொடுத்து வென்றான்.தேவந்தி என்பவளை மணந்து,இல்லறத்தில் ஈடுபட்டு வாழ்ந்து வந்தான்.அப்படி இன்பமாக வாழ்ந்து வந்த ஒரு நாளில்,அவன் அவளைக் கட்டித் தழுவி,“நான் தீர்த்தமாடப் போகிறேன்,பூவையொத்த உன் கண்கள்,என் பிரிவைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்’ என்று சொல்லி,முதுமை எய்தாத தன் அழகிய இளைய தோற்றத்தை அவளுக்குக் காட்டினான்.பின்னர்,’என் கோயிலுக்கு நீ தினம் வர வேண்டும்’ எனக்கூறி அவளைத் தனியே விட்டுப் பிரிந்து சென்றுவிட்டான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]