கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்
4.சாத்தனின் அருள்
-இடியுண்ட மஞ்ஞைபோ லேங்கி யழுதாளுக் கச்சாத்தன் அஞ்ஞைநீ யேங்கி ழயலென்று முன்னை உயிர்க்குழவி காணாயென் றக்குழவி யாயோர் |
25 |
குயிற்பொதும்பர் நீழற் குறுக அயிர்ப்பின்றி மாயக் குழவி யெடுத்து மடித்திரைத்துத் தாய்கைக் கொடுத்தாளத் தையலாள் - |
அதனைக் கண்டு,துயருற்ற மாலதி,இடியோசைக் கேட்டுப் பதறி அகவும் மயில் போல ஏங்கி அழுதாள்.அவள்மேல் இரக்கம்கொண்ட பாசண்டச் சாத்தன்,’அன்னையே! நீ ஏங்கி அழாதே’,என்று அவளுக்கு ஆறுதல் கூறினான்.’உன் முன்னாலே அந்தக் குழந்தை உயிரோடிருப்பதைக் காண்பாய்!’ என்று வரம் வழங்கினான்.பின்,குயிகள் பாடும் சோலையில் ஒரு மரத்தடியில் தானே அக்குழந்தையாய் மாறிக் கிடந்தான்.மாலதியும்,சற்றே அஞ்சாமல் அவ்விடத்திற்குச் சென்று,அந்த மாயக் குழந்தையை எடுத்து,தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டு சென்றாள்.குழந்தையைத் தாயின் கையில் கொடுத்து,தன் துயரம் தீர்த்துக் கொண்டாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]