கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்
3.இடாகினிப் பேய்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக் | 15 |
கேசும் படியோ ரிளங்கொடியாய் ஆசிலாய் செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார் பொய்யுரையே யன்று பொருளுரையே கையிற் படுபிணந்தா வென்று பறித்தவள்கைக் கொண்டு சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்கிருளிற் சென்றாங் |
20 |
கிடுபிணந் தின்னு மிடாகினிப்பேய் வாங்கி மடியகத் திட்டாள் மகவை - |
பாசண்டச் சாத்தன் கோயிலுக்கு இறுதியாகச் சென்று,குழந்தை மீண்டும் உயிர் பெற வேண்டி நின்றாள் மாலதி.அப்போது,பிறருடன் ஒப்பிட முடியாத அழகிய பெண் உருவத்தில் இடாகினிப் பேய் அவள் முன் தோன்றியது.’குற்றமற்றவளே!தவம் செய்தவர்க்கே தேவர் நேரில் வந்து வரம் கொடுப்பர்.உன் போன்றோர் முன் ஒருபோதும் வரமாட்டார்.நான் சொல்வது பொய்யல்ல,உண்மை!’,என்றது.’உன் கையிலுள்ள பிணத்தை என்னிடம் தா’ என்று கூறி அக்குழந்தையை அவளிடமிருந்து பறித்து,அதன் கையில் வாங்கிக் கொண்டது.கரிய இருள் சூழ்ந்தச் சுடுகாட்டிற்குள் சென்று,குழியிலிடும் பிணங்களை உண்ணும் இடாகினிப் பேய்,குழந்தைப் பிணத்தைத் தன் வயிற்றுக்குள் போட்டுக் கொண்டது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]