கனாத்திறம் உரைத்த காதை - சிலப்பதிகாரம்
2.மாலதியின் சோகம்
-மேலோர்நாள் மாலதி மாற்றாள் மகவுக்குப் பாலளிக்கப் |
5 |
பால்விக்கிப் பாலகன் றான்சோர மாலதியும் பார்ப்பா னொடுமனையா ளென்மேற் படாதனவிட் டேற்பன கூறாரென் றேங்கி மகக்கொண் டமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம் புகர்வெள்ளை நாகர்தங் கோட்டம் பகல்வாயில் |
10 |
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேற்கோட்டம் வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம் நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்கெங்குந் தேவிர்காள் எம்முறுநோய் தீர்மென்று மேவியோர் |
முன்பொருநாள்,’மாலதி’ என்ற பெண்ணொருத்தி,தன் மாற்றாள் குழந்தைக்குப் பாலூட்டினாள்.அப்போது எதிர்பாரத விதமாக,பால் விக்கியதால் குழந்தை இறந்தது.இதனால் தன் கணவனும் மாற்றாளும் தன்மேல் தகாத பழிச் சொற்களைக் கூறுவார்களே,என எண்ணி வாடினாள்.இறந்த குழந்தையை எடுத்துக்கொண்டு,கற்பகத்தரு மரம் நிற்கும் கோயில்;ஐராவதம் நிற்கும் கோயில்;அழகிய வெண்மையான மேனியுடைய பலதேவர் கோயில்;பகல் பொழுதுக்குக் காவலனான,கிழக்குத் திசையில் தோன்றும் சூரியன் கோயில்;ஊர் தேவதை நிற்கும் கோயில்;முருகன் கோயில்;இந்திரன் படைக்கலமான வச்சிரம் நிற்கும் கோயில்;ஐயனார் கோயில்;அருகன் கோயில்;சந்திரன் கோயில் ஆகிய கோயில்களுக்கு எல்லாம் சென்று,“தெய்வங்களே! எனக்கு வந்ததுயரைத் தீருங்கள்” என அழுது நின்றாள்.ஆனால்,அவள் வேண்டுதலுக்கு எந்தத் தெய்வமும் இரங்கவில்லை.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கனாத்திறம் உரைத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]