வேனிற் காதை - சிலப்பதிகாரம்
வெண்பா
செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்தொழுக மைந்தார் அசோகம் மடலவிழக் - கொந்தார் இளவேனல் வந்ததால் என்னாங்கொல் இன்று வளவேனிற் கண்ணி மனம். |
1 |
செந்தாமரை மலர்கள் இதழ் விரிந்தன.மாமரங்களில் தளிர்கள் அழகொழுகத் துளிர்த்தது.அழகிய பொழுதில் அசோகமும் இதழ் விரித்தது.பூங்கொத்துக்கள் எல்லாத் திசையும் நிறைந்திருக்கும் இளவேனில் காலமும் வந்தது.கூர்வேலினைப் போன்ற கண்களையுடைய மாதவியின் மனம் கோவலனைப் பிரிந்ததால் இனி என்னென்ன துன்பங்களுக்கு ஆளாகுமோ?
ஊடினீர் எல்லாம் உருவிலான் றன்ஆணை கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக் கானற்பா ணிக்கலந்தாய் காண். |
2 |
‘ஊடிப் பிரிந்து வாழும் உள்ளங்களே!காமதேவனின் கட்டளையின்படி நீங்கள் எல்லாரும் கூடி வாழுங்கள்!’,எனக் குயில்கள் அறிவித்தன.மாதவியின் கானல்வரிக் கேட்டு ஊடி நிற்கும் கோவலனே!உன்னோடு எப்போதும் கூடிக் கலந்திருந்த அவளின் மெல்லிய மலர்ப் போன்றப் முகத்தை இந்த இளவேனில் காலத்தில் நீயும் சென்று காண்பாயாக! என்று கோவலனுக்கு உரைப்பது போல் குயில்கள் கூவிக்கொண்டிருந்தன.
வேனிற் காதை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேனிற் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]