வேனிற் காதை - சிலப்பதிகாரம்

7.மாதவி வாடினாள்
அணித்தோட்டுத் திருமுகத் தாயிழை எழுதிய மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற் கிரங்கி வாடிய உள்ளத்து வசந்த மாலை தோடலர் கோதைக்குத் துனைந்துசென் றுரைப்ப மாலை வாரா ராயினும் மாணிழை |
115 |
காலைகாண் குவமெனக் கையறு நெஞ்சமொடு பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள் மாமலர் நெடுங்கண் மாதவி தானென். |
வசந்த மாலை உரைத்த செய்தியைக் கேட்ட மாதவி,’பெருமைப் பொருந்திய அணிகலன்கள் அணிந்தவளே!இம்மாலையிலே அவர் உன்னுடன் வாராமல் போனாலும்,நாளைக் காலையிலாவது அவரை இங்கே நாம் காணபோம்’,எனக் கூறினாள்.பின் செயலற்ற மனத்தோடு,தான் இருந்த மலர்ப்படுக்கையின் மீது,அழகிய மலர் போன்ற நீண்டக் கண்களையுடைய மாதவி,சிறுபொழுதும் இமைகள் மூடாதுப் பிரிவுத் துயரால் வாடினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேனிற் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]