வேனிற் காதை - சிலப்பதிகாரம்

4.கடிதம் எழுத நினைத்தாள்
| சண்பக மாதவி தமாலங் கருமுகை | 45 |
| வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அஞ்செங் கழுநீர் ஆயிதழ்க் கத்திகை எதிர்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு விரைமலர் வாளியின் வியனிலம் ஆண்ட |
50 |
| ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின் ஒருமுக மன்றி உலகுதொழு திறைஞ்சுந் திருமுகம் போக்குஞ் செவ்விய ளாகி அலத்தகக் கொழுஞ்சோறு அளைஇ அயலது பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு |
55 |
மணம் பொருந்திய மலரம்புகளினாலே பெரிய நிலத்தை வென்று,ஒப்பற்றச் செங்கோல் செலுத்தி ஆள்பவன் மன்மதன்.அவன் ஆணையால் வருந்தி,ஒரு திசை மட்டுமின்றி,உலகெங்கும் தொழுது வணங்க வேண்டிய அவனது அழைப்பின் அறைகூவலைக் கடிதம் ஒன்றின் வாயிலாகக் கோவலனுக்கு அனுப்ப நினைத்தாள் மாதவி.
செண்பகம், குருக்கத்தி, பச்சிலை, பித்திகை, வெண்மையான மல்லிகை, மெல்லிதழ் செங்கழுநீர் ஆகிய நறுமண மலர்களுடன், மாறுபட்ட மணமுடைய தாழம் பூவையும் வைத்துத் தொடுக்கப்பட்ட மாலையை மாதவிக் கழுத்தில் அணிந்திருந்தாள். அந்த மாலையின் நடுவே தொடுக்கப்பட்டிருந்த முதிர்ந்தத் தாழம் பூவின் முடக்கத்தையுடைய வெண்மையான இதழிலே ஓர் இதழை ஆராய்ந்து எடுத்தாள்.எடுத்த இதழைத் தாள் எனக் கொண்டு,அதனருகில் இருந்த பித்திகை மலரின் கொழுத்த அரும்பொன்றை எழுத்தாணி எனக் கையில் ஏந்தி, அதனைச் செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்துக் கடிதம் எழுதத் தொடங்கினாள்
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேனிற் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]