வேனிற் காதை - சிலப்பதிகாரம்

2.நிலாமுற்றத்தில் மாதவி
மடலவிழ் கானற் கடல்விளை யாட்டினுள் கோவலன் ஊடக் கூடா தேகிய |
15 |
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி வானுற நிவந்த மேனிலை மருங்கின் வேனிற் பள்ளி ஏறி மாணிழை தென்கடல் முத்துந் தென்மலைச் சந்தும் தன்கடன் இறுக்குந் தன்மைய வாதலின் |
20 |
கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து மையறு சிறப்பின் கையுறை யேந்தி அதிரா மரபின் யாழ்கை வாங்கி மதுர கீதம் பாடினள் மயங்கி ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி |
25 |
நன்பால் அமைந்த இருக்கைய ளாகி |
மலர்கள் இதழ் விரிக்கின்ற கானற்சோலையிலே,கடல் விளையாட்டைப் பார்த்து களித்தபோது,கோபத்தால் கோவலன் பிரிந்து சென்றிட,தனியாக இல்லம் புகுந்தாள்,கரிய மலர் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி.பின்,இளவேனிற் வருகையை விரும்பி,வானுற உயர்ந்த மேல்நிலை மாடத்தின் ஒருபுறமிருந்த இளவேனில் காலத்துக்குரிய இடமான நிலா முற்றத்துக்குச் சென்றாள்.
பெருமையும் சிறப்பும் பொருந்திய அணிகலன்கள் அணிந்திருந்தவள் மாதவி.அவள்,தென்கடல் முத்தும் பொதிகை மலைச் சந்தனமும் அக்காலத்திற்கு எப்பொழுதும் செலுத்தப்படும் காணிக்கைகள் என,தனது மார்பில் குங்குமக்குழம்பு பூசிய இடத்திலே,குற்றமற்ற சிறப்புடைய அந்தப் பொருட்களைத் தன் நெஞ்சில் வாழும் காதலனுக்குக் காணிக்கையாகச் செலுத்தினாள்.அதன்பின்,ஒன்பது வகையான நிலையினுள்,முதன்மையான பத்மாசன நிலையில் அமர்ந்து,சுரங்கள் குலைந்திடாத மரபினையுடைய யாழைத் தன் கையிலே வாங்கி,முதலில் முதுரகீதம் பாட எண்ணியவள்,மயங்கி தன்னை அறியாமல் சோககீதம் பாடத் தொடங்கினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
வேனிற் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]