கானல் வரி - சிலப்பதிகாரம்

5.அறியேனே!
(கானல் வரி)
நிணங்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் |
9 |
வலைவாழ்நர் சேரி வலையுணங்கு முன்றின் |
10 |
முள்பொருந்திய மீன் வற்றல்களைக் காயப்போட்டிருக்கும் இடத்தில்,அவற்றைக் தின்னவரும் பறவைகளை விரட்டுவதை காரணமாகக் கொண்டு,ஒரு கன்னி காவல் காத்து நிற்கின்றாள்.வண்டுகள் கூட்டமாக,அவள் கையில் வைத்திருந்த நறிய ஞாழல் பூங்கொத்தை சுற்றி திரிகின்றன.மனம்கமழும் மலர்கள் நிறைந்த அக்கடற்கரை சோலையில்,தன்னைப் காண்பவரை வருத்தும் தெய்வம் ஒன்று வாழ்ந்து கொண்டிருப்பதை நான் அறியேனே!அறிந்திருந்தால் அங்கு போயிருக்க மாட்டேனே!
வலையினைக் கொண்டு வாழ்வு நடத்துகின்ற மீனவர்கள் வாழ்கின்ற சேரியில்,வலைகளை ஒரு முற்றத்தில் உலர்த்தியிருந்தனர்.அங்கு,ஒரு பூங்கொத்தினை தன் கையிலே ஏந்திவாறு,உலரப் போட்டிருந்த விற்பதற்குரிய மீன்வற்றலை காவல் காத்து கன்னியொருத்தி நின்றிருந்தாள்.தான் வேண்டிய உருவம் எடுத்துக் கொண்டு,கொலைத் தொழில் புரியும்,நீண்ட வேல்போன்ற விழிகளுடன் விளங்கும்,கூற்றம் போன்ற பெண் ஒருத்தி,அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானலில் வாழ்ந்து வருவதை ,முன்னரே நான் அறியேனே!அறிந்திருந்தால் அங்கு நான் சென்றிருக்க மாட்டேனே!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]