கானல் வரி - சிலப்பதிகாரம்

3.புகார் நகரைச் சிறப்பித்துப் பாடியன
வேறு
கரியமலர் நெடுங்கட் காரிகைமுன் |
5 |
காதல ராகிக் கழிக்கானற் கையுறைகொண் டெம்பின் வந்தார் ஏதிலர் தாமாகி யாமிரப்ப நிற்பதையாங் கறிகோ மைய மாதரார் கண்ணு மதிநிழல்நீ ரிணைகொண்டு மலர்ந்த நீலப் போது மறியாது வண்டூச லாடும் புகாரே எம்மூர். |
6 |
மோது முதுதிரையான் மொத்துண்டு |
7 |
கருங்குவளை மலர்போன்ற நீண்டக் கண்களை உடையவள் என் தலைவி.அவளிடம் கடல் தெய்வமான வருணனை சாட்சியாக வைத்து,’உன்னைப் பிரிய மாட்டேன்’,என என் தலைவர் செய்த அரிய சூளுரைகளைப் பொய்யாக்கி விட்டார்.அவர்,அத்தகைய அறன் இல்லாதவர் என்று ஏழையாகிய நாங்கள் எங்ஙனம் அறிவோம்,ஐயனே?
புகார் நிலத்தில் கிடக்கின்ற வெண்சங்கையும் வெண்முத்தையும் கண்டு,அவை தம்மை மலரவைக்க வந்த வெண்மதியும் விண்மீன்களும் என்று எண்ணி,பகல் பொழுதிலும் தன் மொட்டை விரிக்கும் ஆம்பல் மலர்கள்.பகலை இரவென்று தவறாக நினைக்கும் அத்தகைய இயல்பினை வாய்ந்த புகார் அல்லவா எங்கள் ஊர்!
அன்று கடற்கரைச் சோலையில்,என் தலைவி மேல் காதல் கொண்டு,அவளிடம் கொடுப்பதற்காகப் பரிசையும் கையில் ஏந்தி,அவள் பின்னே அவள் அருளினை வேண்டி இரந்தவராகத் தலைவர் வந்தார்.இன்றோ அவர் அவளுக்கு அயலவர் போலாகி,அவள் அவர்பால் இரந்து அவர் அருளினை வேண்டவும்,அருள் உள்ளம் இல்லாதவராகி நிற்கின்றார்.அவர் இவ்வாறு செய்வார் என எங்ஙணம் அறிவோம்,ஐயனே?
மாந்தரின் கண்களையும்,நீரில் தோன்றும் நிலவின் நிழலைக் கண்டு மலர்ந்த கருநீல மலரினையும் நோக்கி,எது கண்?எது மலர்? என வேறுபாடு அறிய முடியாது மயங்கி,வண்டுகள் அங்கும் இங்கும் ஊசலாடும்,வளமுடைய புகார் அல்லவா எங்கள் ஊர்!
மோதுகின்ற பெரிய அலையால் தாக்கப்பட்டு அசைந்து,கரை நோக்கி ஒலி எழுப்பும் வாயுடைய சங்குகள்.இவை ஆற்று மணலில் சிறுமியர் எழுதிவைத்த வண்டல் முதலியவற்றை உழுது அழிக்கும்.இதனால் கோபம் கொண்ட சிறுமிகள்,தாம் அணிந்திருந்த மலர்மாலைகளை மென்விரல்களால் அறுத்தெறிந்து,அச்சங்குகள் மீது வீசுவர்.அவ்வேளையில்,மாலையிலிருந்து ஆங்கே சிதறிய நீலமலர்கள்,யாரோ ஒருவர் இமை சுருக்கிப் பார்ப்பது போல் தோற்றமளித்தன.அவ்வழியே அந்த மாலைப்பொழுதினில் கடற்கரை வந்தவர் அவற்றைக் கண்டு,’கடைக் கண்ணால் பார்க்கும் கண்களோ!’ என்று எண்ணித் தொடர்ந்து செல்லாமல் மயங்கி நிற்பர்.அத்தகைய இயல்புடைய புகார் அல்லவா எங்கள் ஊர்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]