கானல் வரி - சிலப்பதிகாரம்
2.வாழி காவேரி
(கோவலன் காவேரியை வாழ்த்திப் பாடுகிறான்.)
வேறு
திங்கள் மாலை வெண்குடையான் |
2 |
மன்னு மாலை வெண்குடையான் |
3 |
உழவ ரோதை மதகோதை |
4 |
புகழ் மாலை சூடிய திங்களைப் போல,புகழ்பெற்ற வெண்கொற்றக் குடையை உடையவன் சோழ மன்னன்.அவன்,தன் செங்கோலினைச் செலுத்திக் கங்கை நதியிடம் சென்று கூடினாலும்,நீ அவனை வெறுக்கமாட்டாய்,ஆகையால்,
காவேரியே நீ வாழ்க!
கயலாகிய கண்ணை உடையவளே!கங்கை என்னும் பெண்ணுடன் உன் கணவன்(சோழன்) சேர்ந்தாலும் நீ அவனை வெறுக்காமல் இருக்கக் காரணம்,உன் போன்ற மாந்தரின் பெருமைமிக்க உயர் கற்புநெறி என்பதை நான் அறிந்து கொண்டேன்.
காவேரியே நீ வாழ்க!
பெருமை பொருந்திய புகழ்மாலையினை அணிந்த,வெண்கொற்றக் குடையை உடையவன் உன் கணவன்(சோழ மன்னன்).அவன் தனது வளையாத செங்கோலினைச் செலுத்திக் குமரியையும் கூடினான்.அதனாலும் நீ அவனை வெறுக்க மாட்டாய்.ஆதலினால்,
காவேரியே நீ வாழ்க!
கயலாகிய கண்ணை உடையவளே!கன்னியாகிய குமரியுடன் சோழன் அவ்வாறு சேர்ந்தாலும்,நீ அவனை வேறுக்காதிருத்தல்,மாந்தரின் பெருமை வாய்ந்த கற்புநெறியால் தான் என்பதை நான் அறிந்தேன்.
காவேரியே நீ வாழ்க!
ஆற்றினில் புதுப்புனல் கண்ட உழவர் மகிழ்ந்து ஆர்க்கும் ஓசையும்,மதகுதனில் நீர் நிறைந்து வடிகின்ற ஓசையும்,வரப்புக்களை உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும்,புதுப்புனல் விழாக் கொண்டாடும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும் மிகுதியாக இருபக்கமும் ஆர்ப்பரிக்க,
நடந்து செல்லும் காவிரியே நீ வாழ்க!
நீ அவ்வாறு சிறந்து நடக்க,காவல் புரியும் வீரமறவர்களின் போர்முழக்கத்தை உடைய சோழனது ஆட்சி பயனே காரணம்.இதை நீ அறிவாயாக…
காவேரியே,நீ வாழ்க!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]