கானல் வரி - சிலப்பதிகாரம்

24.கோவலன் பிரிந்தான்
வேறு
(கட்டுரை)
(கட்டுரை)
எனக்கேட்டு, கானல்வரி யான்பாடத் தானொன்றின்மேல் மனம்வைத்து மாயப்பொய் பலகூட்டு மாயத்தாள் பாடினாளென யாழிசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந் துருத்ததாகலின் உவவுற்றதிங்கள் முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப் பொழுதீங்குக் கழிந்ததாகலின் எழுதும்என் றுடனெழாது ஏவலாள ருடன்சூழ்தரக் கோவலன்தான் போனபின்னர்த் தாதவிழ் மலர்ச்சோலை ஓதையாயத்து ஒலியவித்துக் காதலனுட னன்றியே மாதவிதன் மனைபுக்காள் ஆங்கு, மாயிரு ஞாலத் தரசு தலைவணக்குஞ் சூழி யானைச் சுடர்வாட் செம்பியன் மாலை வெண்குடை கவிப்ப ஆழி மால்வரை அகவையா வெனவே. |
52 |
தாது சொரிகின்ற பூக்கள் அடர்ந்தச் சோலையிலே,கோவலன் கைவிட்டுச் சென்றிட,அதனால் கலங்கி ஆரவாரம் செய்த மாதவியின் தோழிகளின் ஒலியும் ஒருவாறு அடங்கியது.செயலிழந்துத் தவித்த மாதவி,தன் வண்டியினுள்ளே சென்றமர்ந்தாள்.காதலனான கோவலன் அவளுடன் வராததால்,தனியாகத் தன்மனை புகுந்தாள்.
அங்கு,பரந்த பெரியவுலகின் அரசர்கள் எல்லாம் தலைவணங்கச் செய்யும் சோழ மன்னனையும்,அவனது முகபடாம் அணிந்த யானையையும்,ஒளிபொருந்திய வாளையும்,“மிகப்பெரிய சக்கரவாளம் எனும் மலையை உள்ளடக்கி ஆட்சி புரிக” என்று வெண்கொற்றக் குடையையும் வாழ்த்தினர்.
கானல் வரி முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]