கானல் வரி - சிலப்பதிகாரம்
23.வணங்குகிறோம்!
வேறு
தீத்துழைஇ வந்தஇச் செல்லன் மருள்மாலை தூக்காது துணிந்தஇத் துயரெஞ்சு கிளவியால் பூக்கமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும். |
51 |
இந்த மயக்கம் தரும் மாலைப்பொழுது,தீயைக் கொட்டிப் பரப்பி அதன் வெப்பத்தினால் எனக்கு வருத்தத்தைத் தருகிறதே! என்னை இவ்வாறு வருத்தும் என்று சற்றும் கருதாது,அவர் கூறிய பொய்களை உண்மையென நம்பி ஏமாந்துவிட்டோமே! பூமணம் கமழ்கின்ற கானற்சோலையிலே வாழுகின்ற பெரிய கடல் தெய்வமே!’அவர் பொய்ச்சூளுரையைப் பொறுப்பாயாக’,என்று,உனது மலரடிப் பணிந்து வணங்குகிறோம்.என் மேல் இரக்கம் கொண்டாவது,அவருக்கு நீ எந்தக் கேட்டையும் நீ செய்யாமல் இருக்க வேண்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]