கானல் வரி - சிலப்பதிகாரம்

20.அடைந்து விடாதே !
வேறு
(முகம் இல் வரி)
(முகம் இல் வரி)
அடையல் குருகே அடையலெங் கானல் அடையல் குருகே அடையலெங் கானல் உடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோ யுரையாய் அடையல் குருகே அடையலெங் கானல். |
46 |
நாரையே! என் கானலிடத்தில் வந்து நீயும் அடைந்து விடாதே !
நாரையே! என் கானலிடத்தில் வந்து நீயும் அடைந்து விடாதே !
கரையை அடித்து உடைக்கின்ற அலைகளையுடைய,கடல் சூழ்ந்த ஊரைச் சார்ந்த என் தலைவனிடம் சென்று,நான் உற்றக் காதல் நோயினை நீ அவருக்கு உணர்த்துவாயாக …
அதனால்,இப்போது என் கானலுக்குள் வந்து நீ அடைந்து விடாதே !
21.மாதவி பாடினாள்
வேறு (காடுரை)
ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும் காந்தள் மெல்விரற் கைக்கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப் பாங்கினிற் பாடியோர் பண்ணுப் பெயர்த்தாள். |
47 |
அதுவரை பாடிய மங்கையான மாதவி;அதன் பின்னர்த் தன் மெல்லிய காந்தள் மலர் போன்ற விரல்களால்,கைக்கிளையைச் சுருதியாகக் கொண்டு இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையை யாழிலே எழுப்பி,அதனை இசை நூல்கள் கூறிய முறைப்படி தன் குரலில் பாடினாள்.அதற்குப் பின்பு வேறொரு பண்ணையும் பாடத் தொடங்கினாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]