கானல் வரி - சிலப்பதிகாரம்

18.பிரிந்தவர் நாட்டிலும் உளதல்லவா?
வேறு
(மயங்கு திணை நிலைவரி)
(மயங்கு திணை நிலைவரி)
இளையிருள் பரந்ததுவே எற்செய்வான் மறைந்தனனே களைவரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே தளையவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட் டுளதாங்கொல் வளைநெகிழ எரிசிந்தி வந்தவிம் மருண்மாலை. |
40 |
கதிரவன் மறைந்தனனே காரிருள் பரந்ததுவே எதிர்மலர் புரையுண்கண் எவ்வநீ ருகுத்தனவே புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட் டுளதாங்கொல் மதியுமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை. |
41 |
பறவைபாட் டடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே நிறைநிலா நோய்கூர நெடுங்கணீர் உகுத்தனவே துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட் டுளதாங்கொல் மறவையாய் என்னுயிர்மேல் வந்தஇம் மருள்மாலை. |
42 |
கதிரவனும் மறைந்தான்!கருமையான இருள் எங்கும் பரந்தது.மைத் தீட்டிய அழகுமலர் போன்ற என் கண்களும் கண்ணீர் சிந்தின.புதிய முழுநிலா போன்ற முகம் உடையவளே!நம்மைவிட்டுப் பிரிந்தவர் நாட்டிலும்,திங்கள் ஒளியை உமிழ்ந்து கதிரவனின் ஒளியை விழுங்கும்,மயக்கம் தரும் இந்த மாலைப் பொழுது உளதல்லவா?
பறவைகளின் இசை ஒலி அடங்கிற்று.பகல் பொழுதை உருவாக்கும் கதிரவனும் மேற்திசை வானில் சென்று மறைந்து விட்டான்.நிறுத்தவும் முடியாமல் காமநோய் மிகுதியால் உன் நீண்டக் கண்களும் கண்ணீர் உதிர்த்தது.மொட்டவிழ்ந்த மலர்கள் சூடியக் கூந்தலை உடையவளே!கொடுமையான வன்மையுடன் என் உயிரின் மீது பகை கொண்டு வந்த, மயக்கத்தையுடைய இந்த மாலைப்பொழுது,நம்மைத் துறந்து சென்றவர் நாட்டிலும் இருக்கும்மன்றோ?
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]