கானல் வரி - சிலப்பதிகாரம்
17.தாய் அறிந்தால் என்ன செய்வேன்
வேறு
(மயங்கு திணை நிலைவரி)
(மயங்கு திணை நிலைவரி)
நன்னித் திலத்தின் பூண்அணிந்து நலஞ்சார் பவளக் |
37 |
வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள |
38 |
புலவுற் றிரங்கி அதுநீங்கப் பொழிற்றண் டலையிற் |
39 |
நல்ல முத்திலான அணிகலன்களை அணிந்து,நலம் தரும் ஆற்றல் பொருந்திய பவளத்தால் செய்த மேகலா பரணத்தை உடுத்தி,செந்நெல் பயிரையுடைய மருத நிலம் தோறும்,அலைகள் உலா வருகின்ற கடலின் கரைகளையுடைய நெய்தல் நிலத் தலைவனே! புன்னை மரங்களுடைய சோலையிலே,மீன்கொடி உடைய காமன் எய்திய அம்புகளால் என் மேனியில் உண்டான புதிய புண்கள் என்னை இனம் காணாதபடி,என் அழகை மறைத்தன.இதை தாய் அறிந்தால்,நான் என்ன செய்வேன்?
கடல் முத்துக்கு நிகராகப் புன்னகை செய்து,அழகிய செம்பவளம் போன்ற வாய்த் திறந்து,பரதவர் வாழும் சேரியில் வலைகள் உலர வைத்திருக்கும் முற்றத்திலே,அலைகள் உலாவருகின்ற கடலினைக் கரையாகக் கொண்ட நெய்தல் நிலத் தலைவனே!மழைக்காலத்தில் மலரும் பீர்க்கம்பூவின் நிறத்தை என் மேனி அடைந்து,பசலைப் படர்ந்து விளங்குகிறது.தெய்வத்தை வேண்டி,இந்தக் கொடுமையைச் செய்தவர் யார் என்று தாய் அறிந்தால்,நான் என்ன செய்வேன்?
புலால் நாற்றம் தன் மீது பொருந்தியிருப்பதற்காக வருந்தி,அந்த வாடையை நீக்குவதற்காகப் பொழிலாகிய கானற்சோலைக்குள் புகுந்து,ஆங்கே உதிர்ந்து கிடந்த பழம்பூக்களின் மணம் கமழ,உலாவுகின்ற அலைகள் உடைய நெய்தல் நிலத் தலைவனே!பலவகைத் துன்பங்களையும் அனுபவித்து வருந்துவதால்,இது இன்ன நோய் என்று அறியாமல்,வந்து பரவுகின்ற பெரிய காமநோயை பெற்று,என் தலைவி தனியாக இருந்து துன்புறுகிறாளே!இவள் மெலிவதும் இரங்குவதும் பிறர்க்குப் புலப்படவில்லை என்பதால் யாருக்கும் இதுவரை தெரியவில்லை.இதனை அவள் தாய் அவள் அறிந்து விட்டால்,நான் என்ன செய்வேன்?
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]