கானல் வரி - சிலப்பதிகாரம்

15.உணரேனடீ!
(தலைவனின் மனக்குறையைத் தீர்க்க நினைக்கும் தோழி,அறியேன் என்று வலிமையாகச் சொல்லி,தலைவிக்கு தலைவன் மேல் விருப்பம் உண்டாக்க முயல்கிறாள்)
வேறு
(திணை நிலைவரி)
(திணை நிலைவரி)
புணர்துணையோ டாடும் பொறியலவன் நோக்கி இணர்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி உணர்வொழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன் வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால். |
31 |
தன் துணையோடு கலந்து விளையாடுகின்ற,புள்ளிகளுடைய உடம்பினை உடைய நண்டினைக் கண்டான் தலைவன்.அந்தச் சமயம் பூங்கொத்துக்கள் அடர்ந்தக் கானற்சோலையிலே நின்ற என்னையும் நோக்கி,தன் உணர்விழந்த நிலையில் சென்றான்.அவ்வாறு போன,ஒலிக்கும் அலைகளைக் கொண்ட கடல் பகுதியைச் சார்ந்தவனின் மன நிலைமையை,வளைந்த சுருள் கூந்தல் உடையவளே!நானும் உணரேனடீ!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]