கானல் வரி - சிலப்பதிகாரம்

13.ஆம்பல் மலர்ந்தது!
(அன்னத்தையும் பூக்களையும் கண்டு ஆம்பல் மலர்ந்தது போல,உன் பொய்யான சொற்களைக் கேட்டு என் தலைவி இணங்கினாள் என்று தோழி தலைவனுக்கு உணர்த்துவது போல அமைந்துள்ளது இப்பாடல்.)
வேறு
(சார்த்து வரி)
(சார்த்து வரி)
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து |
29 |
ஆற்றல்மிக்கப் பரதவர் வாழும் பாக்கத்தில்,களவில் கூடிய மகளிர்,தலைவனைப் பிரிந்தத் துயரால்,அவர்களின் சிவந்த முன்கையில் இருந்து வளையல்கள் தானே கழன்று விழுந்து பழிப்பதை,ஏழைகளாகிய நாம் எங்ஙனம் அறிவோம்?ஐயனே ! அன்னமொன்று அரும்பிய பூக்களின் சுமையால் பாரம் அதிகரித்த நீண்ட புன்னைமரத்தின் கிளையில் ஏறியிருக்க,அந்த அன்னத்தை முழுநிலவு என்றும்,பூக்களை நட்சத்திரங்கள் என்றும் எண்ணி,ஆம்பல் மலர் பகலிலேயே மலர்ந்தது.அவ்வாம்பல் மலரை வண்டுகள் ஊதி நிற்கும் புகார் அல்லவா எனது ஊர்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]