கானல் வரி - சிலப்பதிகாரம்

12.முத்துகள் ஈடாகாதவை!
(முத்துக்களைத் தந்து பூங்கொத்தை அள்ளிச் செல்லும் அலையைப் போல,தலைவன் முத்துக்களைக் கொடுத்து பூங்கோதையாகிய தலைவியைப் பெற விரும்புகிறான் என எண்ணி தோழி தலைவனின் பரிசை வாங்க மறுக்கிறாள்.)
வேறு
(சார்த்து வரி)
(சார்த்து வரி)
தீங்கதிர் வாண்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் |
28 |
இனிய கதிர்களைப் பொழியும் திங்களைப் போல ஒளிபொருந்திய முகத்தையுடைய தலைவியின் சிவந்த வாயில் இருக்கும் அழகிய பற்களுக்கு,நீங்கள் தரும் இந்த முத்துகள் ஈடாகாதவை! எனினும் ‘முத்துகளை நீங்கள் வாங்குங்கள்’ என்று கூறி,திருமாலின் மகன் காமன் போல அன்றாடம் இங்கு வருகின்றாய் கடலே!ஐயனே! ஒலிமிகுந்த கடலின் அலைகள்,ஒளிமிக்க வெண் முத்துக்களைத் தந்து,மணம்மிகுந்த கானலிடத்தில் அவற்றுக்கு ஈடாக வணிகர்கள் போலப் பூங்கொத்தைப் பெற்று விளங்குகின்ற புகார் அல்லவா எனது ஊர்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]