கானல் வரி - சிலப்பதிகாரம்

10.கட்டுரை
(மாதவி,கோவலன் பாடிய பாடல்களைக் கேட்டுக் காதலால் மகிழ்ந்தவள்போல நடித்து,அவனிடமிருந்த யாழை வாங்கி,கோபத்துடன் கானல் வரி பாடத் தொடங்குகிறாள்.)
(கட்டுரை)
ஆங்குக், கானல்வரிப் பாடல்கேட்ட மானெடுங்கண் மாதவியும் மன்னுமோர் குறிப்புண்டிவன் றன்னிலை மயங்கினானெனக் கலவியான் மகிழ்ந்தாள்போற் புலவியால் யாழ்வாங்கித் தானுமோர் குறிப்பினள்போற் கானல்வரிப் பாடற்பாணி நிலத்தெய்வம் வியப்பெய்த நீள்நிலத்தோர் மனமகிழக் கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தாற் பாடத் தொடங்குமன். |
24 |
அவ்விடத்தில்,கோவலன் யாழிசையோடு பாடிய கானல்வரிப் பாடல்களை,மான் போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி கேட்டாள்.அவன் பாடியப் பாடல்களில் வேறோர் பெண்ணைப் பற்றிய குறிப்புகள் இருந்தன என்றும்,இவன் தன்னோடு கூடியிருந்த நிலையிலிருந்து இன்று பெரிதும் மாறியிருக்கிறான் என்றும் சந்தேகித்தாள் மாதவி.மனதில் கோபம் இருந்தாலும்,வெளியே மகிழ்சசியுடன் இருப்பவள் போலத் தோன்றினாள்.யாழினை அவனிடமிருந்த வாங்கி,வேறு குறிப்புகளை மனதில் கொண்டவள் போல,நெய்தல் நில மக்களின் தெய்வமாகிய வருணன் வியக்கவும்,நெடுந்தூரத்தில் இருந்த வந்த மக்கள் கேட்டு மனம் மயங்கவும்,யாழிசையோடு கலந்து,தன் இனிய குரலில் பாடத் தொடங்கினாள் மாதவி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கானல் வரி - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]