கடல் ஆடு காதை - சிலப்பதிகாரம்
6. கடல் ஆடு காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
விஞ்சை வீரன் ஒருவன்,தன் காதலியுடன் புகாருக்கு இந்திரவிழாக் காண வந்தான்.புகார் நகரையும்,மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்கு காட்டி மகிழ்ந்தான்.விழா முடிந்தவுடன் கோவலன் மாதவியோடு ஊடினான்.மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள்.பின்னர் இருவரும் கடற்கரை சென்று களித்து மகிழ்ந்திருந்தனர்.
1.காமக் கடவுள் விழா
(விஞ்சை வீரன் காமக் கடவுளுக்கு விழா எடுத்தான்.)
வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக் கள்ளவிழ் பூம்பொழிற் காமக் கடவுட்குக் கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு விருந்தாட் டயருமோர் விஞ்சை வீரன் |
வெள்ளிமலையில் இருக்கின்ற அகன்ற பெரிய வித்தியாதரர் நகரிலே,தேன் ஒழுக இதழ் விரியும் மலர்களை உடையப் பூம்பொழில் ஒன்றில்,கரிய கயல் மீன்போன்ற நீண்டக் கண்களையுடைய தன் காதலியோடு கூடிக்கலந்து,காமக்கடவுளுக்கு விருந்திட்டு,சோர்வடைந்து காணப்பட்டான் ஒரு வித்தியாதர வீரன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கடல் ஆடு காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]