இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

17.கண்கள் துடித்தன!
(கண்ணகியின் இடக்கண் துடித்தது!மாதவியின் வலக்கண் துடித்தது!)
உள்ளகம் நறுந்தா துறைப்பமீ தழிந்து | 235 |
கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக் கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும் உண்ணிறை கரந்தகத் தொளித்துநீ ருகுத்தன எண்ணுமுறை இடத்தினும் வலத்தினுந் துடித்தன விண்ணவர் கோமான் விழவுநா ளகத்தென். |
240 |
தன்னுள்ளே உள்ள தாதுகள் ஊறி இருத்தலால்,மேலேயிருக்கும் கட்டு அவிழ்ந்து தேன்சொரிய நடுங்கும் கழுநீர் மலரைப்போலக்.கண்ணகியின் கருங்கண்ணும்,மாதவியின் செங்கண்ணும் தத்தம் உள்ளத்தின் நினைவை மறைத்துத்,தத்தம் எண்ணத்தை அகத்தே ஒளிக்க முனைந்து,விண்ணவர் கோமானான இந்திரனின் விழாவின் நள்ளிரவில் கண்ணீர்ச் சொரிந்தனர்.
இதற்குப் பின்,கண்ணகி கோவலுடன் இணையப் போகும் நன்மையை உணர்த்த அவளின் இடக்கண் துடித்தது!மாதவி கோவலனைப் பிரியப் போகும் தீமையை உணர்த்த அவளின் வலக்கண் துடித்தது!
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]