இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

7.வடபுலத்தார் வழகியவை
(வடபுலத்தார் தந்தவற்றைக் கொண்டு சித்திர மண்டபமாகப் பொருத்தினான் சோழன்)
மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும் |
100 |
மகதநன் னாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும் அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்தோங்கு மரபில் தோரண வாயிலும் பொன்னினும் மணியினும் புனைந்தன வாயினும் |
105 |
நுண்வினைக் கம்மியர் காணா மரபின துயர்தீங்கு சிறப்பினவர் தொல்லோ ருதவிக்கு மயன்விதித்துக் கொடுத்த மரபின இவைதாம் ஒருங்குடன் புணர்ந்தாங் குயர்ந்தோ ரேத்தும் அரும்பெறன் மரபின் மண்டப மன்றியும் |
110 |
நிறைய நீர் உடைய கடலை அரணாகக் கொண்டிருந்த வச்சிர நாட்டின் கோமான் முத்துப் பந்தலைக் கொடுத்தான்.வாட்போரில் வல்லவனான மகதநாட்டு மன்னன்,போர் புரிந்து தோல்வியுற்று,பட்டி மண்டபம் ஒன்றைத் திறையாகச் செலுத்தினான்.அவந்திநாட்டு வேந்தன் மனம் உவந்து,மிகுந்த வேலைபாடுகள் அமைந்த தோரண வாயில் ஒன்றை தந்தான்.இம்மூன்றும் பொன்னாலும் மணியாலும் புனையப்பட்டவை ஆயினும்,நுண்மையான தொழில் செய்திடும் கம்மியரும் பார்த்திடாத கைவினை வேலைபாட்டுடன் சிறந்து விளங்கின.பிறர் துயர் நீங்க உதவும் குணம் படைத்தோர் வச்சிர,மகத,அவந்தி நாட்டின் முன்னோர்கள்.அவர்கள் தேவர்களுக்கு ஒரு காலத்தே உதவிசெய்தனர்,அதற்குக் கைம்மாறாகத் தெய்வத்தச்சனான மயன் அவர்களுக்குக் கொடுத்தவை அவை மூன்றும் ஆகும்.அவை மூன்றையும் புகார் நகரில் ஒன்றாகச் சேர்த்து மண்டபமாகப் பொருத்தினான் திருமாவளவன்.அதனை ‘சித்திர மண்டபம்’ என உயர்ந்தோர் வியந்து போற்றுவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]