இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

4.நாளங்காடி
(இந்திர விழா தொடக்கத்தில்,நாளங்காடியில் பூத வழிபாடு நடந்தது)
இருபெரு வேந்தர் முனையிடம் போல இருபாற் பகுதியி னிடைநில மாகிய |
60 |
கடைகால் யாத்த மிடைமரச் சோலைக் கொடுப்போ ரோதையுங் கொள்வோ ரோதையும் நடுக்கின்றி நிலைஇய நாளங் காடியிற் சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென வெற்றிவேன் மன்னற் குற்றதை ஒழிக்கெனத் |
65 |
தேவர் கோமா னேவலிற் போந்த காவற் பூதத்துக் கடைகெழு பீடிகைப் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து துணங்கையர் குரவைய ரணங்கெழுந் தாடிப் |
70 |
பெருநில மன்ன னிருநில மடங்கலும் பசியும் பிணியும் பகையும் நீங்கி வசியும் வளனுஞ் சுரக்கென வாழ்த்தி மாதர்க் கோலத்து வலவையி னுரைக்கும் மூதிற் பெண்டி ரோதையிற் பெயர |
75 |
நாளங்காடிப் பூத வழிபாடு
சோழ மன்னன் முசுகுந்தன்,தேவாகர போரில் தேவர்கள் பக்கம் நின்று போரிட்டு வெற்றிக் கண்டான்.இதற்க்குப் பரிசாக இந்திரன் புகார் நகரையும் மன்னனையும் காப்பதற்கு வலிமைமிக்க பூதமொன்றை பரிசளித்தான்.அப்பூதம் காவேரிப்பட்டினம் நாளங்காடியில் தங்கி நின்று காவல் புரிந்தது.இந்திர விழாவின் தொடக்கத்தில் புகார் மக்கள்,அப்பூததுக்குப் பலியிட்டு வணங்கி வருவது மரபு.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]