இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

16.இல்லற மகளிரின் விருந்தோம்பல்
(விருந்தினர் வருகையால்,தம் கணவர் மேல் கொண்டிருந்த சினம் தணிந்த இல்லற மகளிர்)
உருவி லாளன் ஒருபெருஞ் சேனை இகலம ராட்டி யெதிர்நின்று விலக்கியவர் |
225 |
எழுதுவரி கோலம் முழுமெயும் உறீஇ விருந்தொடு புக்க பெருந்தோட் கணவரொடு உடனுறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த வடமீன் கற்பின் மனையுறை மகளிர் மாதர்வாள் முகத்து மணித்தோட்டுக் குவளைப் |
230 |
போது புறங்கொடுத்துப் போகிய செங்கடை விருந்தின் தீர்ந்தில தாயின் யாவதும் மருந்தும் தருங்கொல்இம் மாநில வரைப்பெனக் கையற்று நடுங்கும் நல்வினை நடுநாள் |
உருவமில்லாத காமதேவனின் ஒப்பற்ற பெரும் படையினராக விளங்கினர் இளம்பரத்தையர்.இவர்கள் இளைஞரோடு போர் தொடுத்து வென்று,அவர் ஓடிவிடாது தடுத்து நின்றனர்.தம்முடைய மார்பிலும் தோலிலும் எழுதிய தொய்யில் என்னும் வரிக்கோலம்,ஆடவர் உடலோடு அழுந்துமாறு பதிவு செய்தனர்.அப்புதிய இலச்சினையைப் பெற்றுத் தம் வீடு புகுந்த பெரிய தோள்களையுடைய கணவரோடு கலந்திருந்த அருந்ததிப் போன்ற கற்பினையுடைய மனைவியர் ஊடிச் சினந்தனர்.அவ் வேளையில் விருந்தினர் சிலரும் வந்தனர்.இதனால் அவள் மேலும் ஊடல் பாராட்ட இயலாது,வந்திட்ட விருந்தினரை உபசரித்தனர்.அழகிய ஒளி பொருந்திய இம்மனைவியர் முகம் கண்டு,நீலமணி ஒத்த இதழ்களையுடைய குவளை மலர் புறங்கொடுத்துப் போயின.இதற்கு காரணமான அவள் கண்களில் கோபத்தால் தோன்றிய கருருஞ்சிவப்பு,விருந்தினரைக் கண்டதும் மறைந்து விட்டது.‘அவளின் இந்த கோபம் மட்டும் நீங்காமல் போயிருந்தால்,இந்த பரந்த நிலவுலகம் இவள் ஊடல் நீங்க வேறு ஒரு மருந்தை தர வேண்டியிருந்திருக்குமோ?’,என செயலற்று நடுநடுங்கி நின்றனர் கணவன்மார்கள்.
இந்திர விழாவின் நடுநடுவே,இது போன்ற காட்சிகளும் புகாரில் நடந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]