இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்
13.விழா காட்சிகள்
(இந்திர விழாவையோட்டி புகாரில் நிகழ்ந்த காட்சிகள்)
அறவோர் பள்ளியும் அறனோம் படையும் புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும் |
180 |
திறவோ ருரைக்குஞ் செயல்சிறந் தொருபால் கொடித்தேர் வேந்தனொடு கூடா மன்னர் அடித்தளை நீக்க அருள்சிறந் தொருபால் கண்ணு ளாளர் கருவிக் குயிலுவர் பண்ணியாழ்ப் புலவர் பாடற் பாணரொடு |
185 |
எண்ணருஞ் சிறப்பின் இசைசிறந் தொருபால் முழவுக்கண் துயிலாது முடுக்கரும் வீதியும் விழவுக்களி சிறந்த வியலு ளாங்கண் |
அறவோர்கள் வாழும் பள்ளிகளிலும்,அறத்தினைக் காக்கும் அறச்சாலைகளிலும்,
புறநகரங்களில் உள்ள துறந்தார் மட்டுமே வாழ்கின்ற புண்ணியத் தலங்களிலும்,திறமை உடையவர் உரைக்கும் அறிவுரைகள் அனைத்தும் ஒரு புறம் சிறப்பாக நடைப்பெற்றன.
கொடியணிந்த தேரினையுடைய சோழனுக்குப் பகையாகி கைதிகளாக இருந்த மன்னர்களின் விலங்குகள் அகற்றப்பட்டு,அவர்களை விடுதலை செய்கின்ற அருட்செயலும் ஒரு புறம் சிறப்பாக நிகழ்ந்தது.
பிறர் கண்களைக் கவர்ந்து ஆடிவரும் கூத்தர்,குயிலுவக் கருவியாளர்,யாழிலே பண்ணிசைக்கும் புலவர்,வாய்ப் பாட்டுப் பாடுகின்ற பாணர் ஆகியவர்களின் அளந்து கூற இயலாத சிறப்புடைய அரிய இசைநிகழ்ச்சிகள் பலவும் ஒரு புறம் சிறப்பாக நடைபெற்றன.முழவுகள் சற்றும் ஓய்வின்றி இரவும் பகலுமாக முழங்கின.குருந்தெருக்களும் பெரிய வீதிகளும் விழாவின் களிப்பினாலே சிறந்து விளங்கின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]