இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

11.இந்திரனை நீராட்டினர்
(வானவர் தலைவனான இந்திரனை நீராட்டினர்)
ஐம்பெருங் குழுவும் எண்பே ராயமும் அரச குமரரும் பரத குமரரும் கவர்பரிப் புரவியர் களிற்றின் தொகுதியர் இவர்பரித் தேரினர் இயைந்தொருங் கீண்டி |
160 |
அரைசுமேம் படீஇய அகனிலை மருங்கில் உரைசால் மன்னன் கொற்றங் கொள்கென மாயிரு ஞாலத்து மன்னுயிர் காக்கும் ஆயிரத் தோரெட் டரசுதலைக் கொண்ட தண்ணறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப் |
165 |
புண்ணிய நன்னீர் பொற்குடத் தேந்தி மண்ணக மருள வானகம் வியப்ப விண்ணவர் தலைவனை விழுநீ ராட்டிப் |
அரசனின் ஐம்பெருங் குழுவினர்,எண்பேர் ஆயத்தினர்,அரசகுமாரர்,பெரும் வாணிகக் குடும்பத்தின் குமாரர்,விரைந்து செல்லும் குதிரையை இயக்கும் வீரர்,யானை மீது ஏறி கும்பலாக வரும் கூட்டத்தினர்,பாய்ந்து செல்லும் குதிரைகள் பூட்டிய தேர்கள் உடையோர் அனைவரும் ஒன்றாகத் திரண்டு வந்தனர்.தம் அரசரை மேம்படுத்த எண்ணியே,’புகழ் நிறைந்த மன்னன் வெற்றி கொள்வானாக‘ என வாழ்த்தினர்.மிகவும் பெரிதான உலகத்தில் வாழும் ஆயிரத்தெட்டு சிற்றரசர்,தம் வளத்தால் உலகைக் காக்கும் குளிர்ந்த காவிரியின் பூந்தாது நிறைந்த சங்கமத்துறையில் இருந்து புண்ணிய நல்ல நீரினைப் பொற்குடங்களிலே ஏந்தியே வந்து,மண்ணில் இருப்பவர் மயக்கமடையவும்,விண்ணில் இருப்பவர் வியந்து பார்க்கவும்,வானவர்க்கு அரசனாகிய இந்திரனை ஆயிரத்தெட்டு கலச நீரைக் கொண்டு திருமஞ்சன நீராட்டினர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]