இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்
10.வீதியின் மங்கலத் தோற்றம்
(இந்திரனை வரவேற்க வீதிகள் பொலிவுடன் காத்திருந்தன)
மரகத மணியொடு வயிரங் குயிற்றிப் பவளத் திரள்காற் பைம்பொன் வேதிகை நெடுநிலை மாளிகைக் கடைமுகத் தியாங்கணுங் கிம்புரிப் பகுவாய்க் கிளர்முத் தொழுக்கத்து |
150 |
மங்கலம் பொறித்த மகர வாசிகைத் தோரண நிலைஇய தோமறு பசும்பொற் பூரண கும்பத்துப் பொலிந்த பாலிகை பாவை விளக்குப் பசும்பொற் படாகை தூமயிர்க் கவரி சுந்தரச் சுண்ணத்து |
155 |
மேவிய கொள்கை வீதியிற் செறிந்தாங்கு |
விழா வீதிகளில்,மரகத மணியோடு வைரமும் சேர்த்து இழைத்த பவளத்தூண்களும்,பசும்பொன்னால் அமைக்கபட்டிருந்த பெரிய மாளிகைகளின் திண்ணைகளும் இருந்தன.நெடுநிலை மாளிகைகளின் வாயில்தோறும் கிம்புரி பொறித்த கொம்பினையும்,முத்துச் சிப்பியைப் பிளந்து பெற்ற ஒளியுடைய முத்துக்களையும் அமைத்து,மங்கலம் பொறித்த வாசிகை வடிவாக வளையச் செய்த மகரதோரணங்களும் இருந்தன.மாசற்ற பசும்பொன்னால் ஆன பூரணகும்பங்களும்,பொலிவுடன் விளங்கும் முளைப் பாலிகைகளும்,பாவை விளக்கும்,பசும் பொன் கொடியும்,வெண்மையான மயிரினையுடைய வெண் சாமரையும்,அழகிய மணமிகுந்த பொற்சுண்ணமும் இருந்தன.இவை அனைத்தும் வீதியெங்கும் வைக்கப்பட்டு,ஊர்வலமாக வரும் இந்திரனை வரவேற்கக் காத்திருந்தன.
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]