இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - சிலப்பதிகாரம்

5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
புகார் நகரின் அமைப்பு,அங்கு வாழ்ந்த பல்வேறு வகையான குடியினர்கள்,அவர்கள் இந்திரவிழாக் கொண்டாடிய சிறப்புப் பற்றிச் சொல்லும் பகுதி
1.கதிரவன் தோன்றினான்
(இருளென்னும் போர்வையை விலக்கிட கதிரவன் தோன்றினான்)
அலைநீ ராடை மலைமுலை யாகத்து ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தற் கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை புதையிருட் படாஅம் போக நீக்கி உதய மால்வரை உச்சித் தோன்றி |
5 |
உலகுவிளங் கவிரொளி மலர்கதிர் பரப்பி |
அலைளைக் கொண்ட கடலினைத் தன்னுடைய ஆடையாகவும்,மலைகளைத் தன் முலைகளாகவும்,அம்மலையில் பாயும் பெரிய ஆறுகளைத் தன் மார்பில் அணிந்துள்ள முத்து வடங்களாகவும்,மழைமேகத்தைத் தன் கருங்கூந்தலாகவும் உடையவள்,பெரும் பரப்பினையுடைய நிலமகள்.அவள் உடம்பை மறைத்து நின்ற இருளாகிய பெரும் போர்வையானது நீக்கியவனாக,மலை மீது சூரியன் உதித்தான்.அச்சூரியன் உலகமெங்கும் விளங்குவதற்கு எழுந்து,கதிர்களைப் பரப்பியவனாகத் தோன்றினான்.
2.மருவூர்ப் பாக்கம்
(புகார்நகரம் மருவூர்ப்பாக்கம்,பட்டினப்பாக்கம் என்னும் இருபிரிவுகளாக இருந்தது.மருவூர்ப்பாக்கம் காட்சிகளை விளக்கும் பகுதி)
வேயா மாடமும் வியன்கல இருக்கையும் மான்கட் காலதர் மாளிகை யிடங்களும் கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும் பயனற வறியா யவன ரிருக்கையும் |
10 |
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள் கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும் வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் பூவும் புகையும் மேவிய விரையும் பகர்வனர் திரிதரு நகர வீதியும் |
15 |
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினுங் கட்டு நுண்வினைக் காருக ரிருக்கையும் தூசுந் துகிரும் ஆரமும் அகிலும் மாசறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல வெறுக்கையோ டளந்துகடை யறியா |
20 |
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகும் பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலங் குவித்த கூல வீதியும் காழியர் கூவியர் கண்ணொடை யாட்டியர் மீன்விலைப் பரதவர் வெள்ளுப்புப் பகருநர் |
25 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இந்திரவிழவு ஊர் எடுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]