அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்
5.பிற மகளிர்
(வேனிற்காலத்தில்,காதலனோடு கூடியிருந்த பிற மகளிரின் நிலை.)
குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு | 35 |
குணதிசை மருங்கிற் காரகில் துறந்து வடமலைப் பிறந்த வான்கேழ் வட்டத்துத் தென்மலைப் பிறந்த சந்தன மறுகத் தாமரைக் கொழுமுறித் தாதுபடு செழுமலர்க் காமரு குவளைக் கழுநீர் மாமலர்ப் |
40 |
பைந்தளிர்ப் படலை பரூஉக்கா ழாரம் சுந்தரச் சுண்ணத் துகளொடும் அளைஇச் சிந்துபு பரிந்த செழும்பூஞ் சேக்கை மந்தமா ருதத்து மயங்கினர் மலிந்தாங்கு ஆவியங் கொழுந ரகலத் தொடுங்கிக் |
45 |
காவியங் கண்ணார் களித்துயி லெய்த |
மேற்கு திசை நாடுகளிலிருந்து வந்த வெண்மையான கண்டு சருக்கரை என்னும் பொருளுடன்,கீழ்த்திசை நாடுகளிலிருந்து வந்த கருமை நிற அகிலையும் ஒன்று சேர்த்து புகைக்கின்ற நறுமணப் புகையை,வேனிற்காலம் என்பதால் மகளிர் துறந்தனர்.
வடமலை நாட்டிலிருந்து கொண்டுவரப் பெற்ற ஒளிமிக்க வட்டக் கல்லிலே,தென்மலையான பொதிகை மலையில் பிறந்த சந்தனக் கட்டையை அரைத்துத் தம் உடலின் மேலே பூசிக் கொண்டனர்.
தாமரையின் இளந்துளிரினையும்,மகரந்தம் பொருந்திய அதன் செழுமையான மலரினையும்,பச்சிலைகளுடன் ஒன்றுசேர்த்துக் கட்டிய படலை மாலையினையும்,பரிய முத்தாரத்தையும்,தம் கழுத்திலே அழகாக அணிந்து கொண்டனர்.
சுந்தரமான சுண்ணப் பொடியுடன் கலந்தபடி பூக்களும் சிந்திக்கிடந்த செழுமையான மலரணையின் மேல் தென்றல் வீசியதால் மயங்கி,தன் காதலரின் பரந்த மார்பில் சாய்ந்தவராக,நீலோற்பல மலர்போன்ற அழகிய கண்களையுடைய இளமகளிர்,இன்பத்தில் திளைத்து,பின் அந்நிலையிலேயே மயங்கி உறங்கினர்….
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]