அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்

3.நிலவின் வருகை
இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின் அந்திவா னத்தின் வெண்பிறை தோன்றிப் புன்கண் மாலைக் குறும்பெறிந் தோட்டிப் பான்மையில் திரியாது பாற்கதிர் பரப்பி |
25 |
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து |
வயதில் இளையவர் என்றாலும்,பகை அரசு எதிர்த்துவரும் காலத்திலே,அதனை வெல்லும் ஆற்றல் உடையவர் பாண்டிய மன்னர்.அவரது அரசகுலத்திற்கு முதல்வன் சந்திரன் ஆவான்.ஆதலால்,அவன் செந்நிற வானத்தில்,வெள்ளி பிறை வடிவாகி தோன்றினாலும்,வருத்தத்தைத் தரும் மாலையின் குறும்புகளை எல்லாம் எதிர்த்து,அதனை வென்றான்.தன் முறைதனில் பிறழாமல்,பால்போன்ற தன் நிலவுக்கதிர்களை எங்கும் பரப்பினான்.
அவ்வாறு,விண்மீன்களுக்கு இடையே ஆட்சி செய்திட்டே உலகினை துலங்கச் செய்த நிலவுப்பொழுதும்,மாலையை அடுத்துப் புகாரிலே வந்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]