அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - சிலப்பதிகாரம்

4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
கோவலனோடு கூடியிருந்த மாதவியும்,அவனால் கைவிடப்பட்ட கண்ணகியும்,ஒரு மாலை பொழுதில் இருந்த இருவேறு மன நிலைகளை விளக்கிக் காட்டுகிறது இந்த காதை
1.நிலமகள் வாடினாள்
(கதிரவனையும்,சந்திரனையும் காணாமல் நிலமகள் வாடினாள்)
விரிகதிர் பரப்பி யுலகமுழு தாண்ட ஒருதனித் திகிரி உரவோற் காணேன் அங்கண் வானத் தணிநிலா விரிக்குந் திங்களஞ் செல்வன் யாண்டுளன் கொல்லெனத் திசைமுகம் பசந்து செம்மலர்க் கண்கள் |
5 |
முழுநீர் வார முழுமெயும் பனித்துத் திரைநீ ராடை யிருநில மடந்தை அரைசுகெடுத் தலம்வரும் அல்லற் காலைக் |
விரிந்த கதிர்களை உலகம் முழுவதும் பரப்புபவன்;
உலகம் முழுதும் ஆண்டவன்;
ஒப்பற்ற தனி ஒற்றைச் சக்கரத் தேரினைச் செலுத்தி வருகின்ற உறுதியுடையவன்,
என் காதலனான கதிரவனை இந்நேரத்தில் காணவில்லையே?
அழகிய இடத்தையுடைய வானத்தில் தோன்றி;
அழகிய தன் நிலவுக்கதிர்களை விரித்து ஒளி செய்பவன்;
திங்களாகிய என் அழகிய செல்வன்,
அவனும் இவ்வேளையில் எங்குப் போய்விட்டானோ?
என்று தன் முகமாகிய அடிவானம் பசலையால் படரப்பட்டு,செம்மலர்க் கண்கள் முழுவதும் நீர்நிறைந்து வழிய,உடல் முழுதும் நடுங்கிட,கடலை ஆடையாகக் கொண்ட நிலமகள் தன் கணவனைக் காணாது,நெஞ்சம் கலங்கும் மாலை பொழுது….
தேடல் தொடர்பான தகவல்கள்:
அந்திமாலைச் சிறப்புச் செய் காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]