அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

5.தண்ணுமை ஆசிரியர்
(மாதவிக்கு வாய்த்த தண்ணுமை ஆசிரியர் பற்றிய வருணனை.)
ஆடல் பாடல் இசையே தமிழே | 45 |
பண்ணே பாணி தூக்கே முடமே தேசிகம் என்றிவை ஆசி னுணர்ந்து கூடை நிலத்தைக் குறைவின்று மிகுத்தாங்கு வார நிலத்தை வாங்குபு வாங்கி வாங்கிய வாரத்து யாழும் குழலும் |
50 |
ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக் கூருகிர்க் கரணங் குறியறிந்து சேர்த்தி ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச் சித்திரக் கரணஞ் சிதைவின்று செலுத்தும் அத்தகு தண்ணுமை அருந்தொழின் முதல்வனுஞ் |
55 |
ஆடல்,பாடல்,இசை,பண்,பாணி,தூக்கு,இவற்றில் உண்டாகும் குற்றங்கள்,தமிழில் வழங்கும் சொற்கள், ஆகியவற்றை தெளிவுடன் உணர்ந்தவன் இவன்;
ஓர் உருவை இரட்டிக்கு இரட்டி சேர்த்தல் கூடையாகும்.நடனத்தில் அவ்வாறு வரும் இடத்திக் குறைவின்றி ஆவர்த்தனங்கள் துரிதமாக அமைய வாசிக்க வல்லவன்;
வாய்ப்பாட்டும்,யாழும்,குழலும் இசைந்து இசைக்க,கேட்பவர் செவிதனில் இன்பம் சேர்க்குமாறு வாசிப்பவன்;
நிகழ்கின்ற கூத்தின் குறிப்பினை அறிந்து,விரல்நுனிகளை மத்தளத்திலே சேர்த்து இதமாக வாசிக்க தெரிந்தவன்;
பிற கருவிகளின் குறைந்த ஒலியை நிரப்பியும்,மிகுந்த ஒலியை அடக்கியும் ஈடுகள் செய்திடும் திறன் உடையவன்;
இத்தகைய தண்ணுமை என்னும் தொழிலுக்கே தலைசிறந்தவனாக விளங்கும் ஓர் ஆசிரியனும் மாதவிக்கு அமைந்து இருந்தான்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]