அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

4.தமிழ் புலவர்
(மாதவியுடன் வந்த தமிழ் புலவரின் பெருமைகளை கூறும் பகுதி)
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத் தமிழ்முழு தறிந்த தன்மைய னாகி வேத்தியல் பொதுவியல் என்றிரு திறத்தின் நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து |
40 |
இசையோன் வக்கிரித் திட்டதை யுணர்ந்தாங்கு அசையா மரபி னதுபட வைத்து மாற்றோர் செய்த வசைமொழி யறிந்து நாத்தொலை வில்லா நன்னூற் புலவனும் |
அரவாரமுடைய கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் தெரியுமாறு,தமிழ் மொழியின் தன்மை முழுதும் தெரிந்தவனாக புலவன் இருத்தல் வேண்டும்;
‘வேத்தியல்’, 'பொதுவியல்’, என்றிறு நாட்டிய நூல்களின் மரபுகளை நன்கறிந்து,அவற்றை கடைபிடித்து,இசை ஆசிரியரின் பண்ணின் திட்டத்தை உணர்ந்து,சிறிதும் பிறழாமல்,அத்தாளநிலையிலே பொருந்தச் சொற்களை அமைக்க வல்லவனாக இருத்தல் வேண்டும்;
மரபுகளுக்கு மாறுப்பட்டோர் செய்த வசைமொழிகளை அறிந்து,தாம் இயற்றும் கவிதனில் அவ்வசைமொழிகள் வாராமல் செய்யவல்ல நாவன்மையும்,நல்ல நூலறிவு மிக்கவனாகவும் இருத்தல் வேண்டும்;
அத்தகைய தன்மை கொண்ட புலவன் ஒருவனும் மாதவிக்கு தமிழ் ஆசிரியனாக இருந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]