அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

3.இசை ஆசிரியர்
(மாதவியின் இசை ஆசிரியரின் சிறப்புக்களை விவரிக்கும் பகுதி)
யாழுங் குழலுஞ் சீரும் மிடறுந் தாழ்குரல் தண்ணுமை ஆடலொ டிவற்றின் இசைந்த பாடல் இசையுடன் படுத்து வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித் தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் |
30 |
தேசிகத் திருவின் ஓசை யெல்லாம் ஆசின் றுணர்ந்த அறிவின னாகிக் கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் பகுதிப் பாடலுங் கொளுத்துங் காலை வசையறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் |
35 |
அசையா மரபின் இசையொன் றானும் |
யாழ் இசையும், குழல் இசையும், தாளக் கூறுபாடுகளும், வாய்ப்பாட்டும், தாழ்ந்த சுரத்தில் இசைத்திடும் மத்தளமும், ஆகிய இவற்றால் வரும் இசையை கூத்திற்கு பொருந்துமாறு இசைக்க தெரிந்தவன்;
பாடல் வரிக்கும், ஆடலுக்கும் உரிய பொருள்களான நான்கு இயக்கங்களையும் இயக்கி, ’இயற்சொல்’, 'திரிச்சொல்’, 'திகைச்சொல்’, 'வடச்சொல்’, ஆகிய தேசிகச் சொற்களின் ஓசையை சரியாக கடைப் பிடிப்பவன்;
சொற்களின் ஓசை குறிக்கும் பொருள்களெல்லாம் குற்றமறத் தெரிந்த அறிஞன்;
ஆடல்களின் தொகுதிக்கேற்ப,நாடங்களின் பகுதிக்கேற்ப இசைப்பொருத்தம் உணர்ந்து இசைக்கும் பாங்கினை தெரிந்தவன்;
குற்றமற்ற இசைநூல் வழக்குகளை நன்கறிந்து,அவற்றை வகுக்கவும்,விரிக்கவும் செய்யும் திறன் கொண்ட வல்லவன்;
தளராத மனம் கொண்டவன்;
இத்தகைய பெருமை உடைய ஒருவன்,மாதவிக்கு இசை ஆசிரியனாக அமைந்திருந்தான்!
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]