அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

2.நாட்டிய ஆசான்
(மாதவியின் ஆடல் ஆசான் பெருமை)
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப் பதினோ ராடலும் பாட்டுங் கொட்டும் விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்தாங்கு |
15 |
ஆடலும் பாடலும் பாணியுந் தூக்குங் கூடிய நெறியின கொளுத்துங் காலைப் பிண்டியும் பிணையலும் எழிற்கையுந் தொழிற்கையுங் கொண்ட வகையறிந்து கூத்துவரு காலைக் கூடை செய்தகை வாரத்துக் களைதலும் |
20 |
வாரஞ் செய்தகை கூடையிற் களைதலும் பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும் ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும் குரவையும் வரியும் விரவல செலுத்தி ஆடற் கமைந்த ஆசான் தன்னொடும் |
25 |
மாதவியின் ஆடல் ஆசான்,’அகக்கூத்து’,'புறக்கூத்து’,என்ற இருவகைக் கூத்தின் இலக்கணமும் நன்றாக அறிந்தவன் ஆவான்.அவற்றின் பல்வகைப் பகுதிகளான கூத்துக்களையும்,விலக்கு உறுப்புக்களுடன் இணைந்தப் பதினொரு வகையான ஆடல்களும்,அவற்றிகிசைந்த பாடல்களும்,கொட்டும்,இவற்றின் கூறுகளையும் விதிக்கப்பட்ட மரபுகளின்படி விளக்கமாக அறிந்தவனாக இருந்தான்.
ஆடலும்,பாடலும்,தாளங்களும்,தூக்கும் ஒன்றாக முறையே நெறிப்பட அமைய செய்வதில்,அவன் வல்லவன்!
அவ்வாறு செய்யும் போது,பிண்டி,பிணையல்,எழிற்கை,தொழிற்கை என்று சொல்லப்படும் அபிநய வகைகளை அறிந்து கூத்து நிகழும் இடத்திலே,கூடை என்னும் ஒன்றைக் கைத் தொழில் செய்யும் போது,வாரம் என்னும் இரட்டை கைத் தொழில் புகாமலும்,அதுப்போல வாரம் செய்த கை கூடையிற் புகாமலும்;ஆடலும்,அபிநயமும் தம்முள் ஒன்றுடன் ஒன்று கலவாமல் பார்த்து கொள்ளவும் தெரிந்தவன்.
குரவைக்கூத்தும்,வரிக்கூத்தும் ஒன்றுடன் ஒன்று கலந்திடாது,பயிற்றுபவர் ஆடுமாறு கற்பிக்கக் கூடியவன்.
இவ்வாறு ஆடலுக்கு ஏற்ற எல்லா தகுதிகளையும் உடையவனாகிய மாதவியின் ஆடல் ஆசானும்,சோழன் அரங்கிற்கு வந்தான்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]