அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

3. அரங்கேற்று காதை
(நிலைமண்டில ஆசிரியப்பா)
1.மாதவி நாட்டியம் பயின்றால்
(மாதவியின் பிறப்பு,சிறப்பு,நடன பயிற்சி பற்றி விவரித்தல்.)
தெய்வ மால்வரைத் திருமுனி யருள எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய மலைப்பருஞ் சிறப்பின் வானவர் மகளிர் சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய |
5 |
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை தாதவிழ் புரிகுழல் மாதவி தன்னை ஆடலும் பாடலும் அழகும் என்றிக் கூறிய மூன்றி னொன்றுகுறை படாமல் ஏழாண் டியற்றியோர் ஈரா றாண்டிற் |
10 |
சூழ்கழன் மன்னற்குக் காட்டல் வேண்டி |
தெய்வ மலையான பொதிகை மலையில் இருந்த அகத்திய முனிவர் சாபமேற்று,விண்ணுலகை விடுத்து மண்ணுலகில் பிறந்தனர்,இந்திரன் மகன் சயந்தனும்,ஊர்வசியும்.மாதவியாக மண்ணுலகில் பிறந்த ஊர்வசி,தன் நடனத் திறமையை அரங்கேற்றி,’தலைக்கோல்’ பட்டம் பெற்றால்.வேணுவாக பிறந்த சயந்தனும் அவளுக்கு துணை நின்றான்.அந்த நடன அரங்கிலே அகத்தியர்,அவர்களுக்குச் சாபம் நீங்க செய்தார்.
நாடகத் தொழிலில் மாறுபாடுகள் இல்லாத சிறப்பினை உடையவர்,மாதவியாக பிறந்த ஊர்வசி போன்ற வானமகளிராகிய நடன மாதர்.அவர்ப் போல குன்றாத தொழில் சிறப்போடு் பிறந்தவள் இந்த ‘மாதவி’!
சித்திராபதியின் மகளாக பிறந்த இவள்,அழகிய பெரிய தோள்களை உடையவள்;அந்த மாதவியான ஊர்வசின் மரபினிலே வந்து பிறந்தவள்;தாது அவிழ்கின்ற மலர்கள் சூடிய,சுருள் கூந்தல் உடையவள்.
‘கூத்து’,'பாட்டு’,'ஒப்பனை’ என்று நாடக மகளிர்க்கு உரிமையாக சொல்லப்படும் மூன்றினுள் ஒன்றினும் குறைவில்லாமல் ஏழாண்டுக்காலம் மாதவி இவற்றில் முறையாக பயிற்சி பெற்றால்.தாம் பயின்ற நடன கலையை அரங்கேற்ற நினைத்து,தம் பன்னிரண்டாவது வயதில்,வீரர் படை சூழ்ந்த,கழலணிந்த சோழமன்னன் அவைக்கு செல்ல விரும்பினால்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]