அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

14.தலைக்கோலி
(சோழ மன்னன் மாதவிக்கு ‘தலைக்கோலி’ பட்டம் வழங்கினான்)
காவல் வேந்தன் இலைப்பூங் கோதை இயல்பினின் வழாமைத் |
160 |
தலைக்கோல் எய்தித் தலையரங் கேறி விதிமுறைக் கொள்கையின் ஆயிரத் தெண்கழஞ்சு ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே |
மாதவி நடனத்தை கண்டு சோழ மன்னன் மகிழ்ந்தான்.அந்நாட்டு நடைமுறை இயல்பு வழுவாமல்,அவன் அணிந்திருந்த பச்சை மாலையையும்,’தலைக்கோலி’ என்ற பட்டத்தையும் மாதவி பெற்றாள்.’முதன்முதலாய் மேடையேறி சிறந்து விளங்கிய நாடக கணிகையர்க்குரிய பரிசின் அளவு இது’,என்று நூலோர் விதித்த முறைப்படி,அரங்கின் முன் ஆயிரத்து எட்டுப் கழஞ்சுப் பொன்னையும் பெற்றாள் மாதவி.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]