அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்

12.தேசிக் கூத்து
(மாதவி ஆடிய தேசிக் கூத்தின் வருணனை)
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப் பாற்பட நின்ற பாலைப் பண்மேல் நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து |
150 |
மூன்றளந் தொன்று கொட்டி அதனை ஐதுமண் டிலத்தாற் கூடை போக்கி வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை |
அதன் பின்னர்,பலைப்பண் என்னும் பண்ணின் மேல் அளவு குன்றாதபடி ஆலாபனை செய்து,நான்கு உறுப்பும் சேர்ந்த செய்திகளை நன்றாக அறிந்து,தேசிக் கூத்தின் முறைப்படி மூன்று ஒத்து(மட்டதாளம்) உள்ள அளவில் ஆரம்பித்து,ஓர் ஒத்து(ஏகதாளம்) உள்ள தாளத்தில் முடித்து,அழகிய மண்டில நிலைமையாலே கை குவித்தல் அவிநயம் எல்லாம் செய்து காட்டி,வாரப் பாடல்களுக்கு மாதவியும் நடனம் ஆடினால்.
13.மார்க்கக் கூத்து
(மாதவி ஆடிய மார்க்கக் கூத்தின் வருணனை)
ஆறும் நாலும் அம்முறை போக்கிக் கூறிய ஐந்தின் கொள்கை போலப் |
155 |
பின்னையும் அம்முறை பேரிய பின்றைப் பொன்னியல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்துக் காட்டினள் ஆதலிற் காவல் வேந்தன் |
பஞ்ச பிரபந்தங்களாகக் கட்டப்பட்ட வடுகில் ஒத்து,தேசியில் ஒத்து காட்டி,இரண்டிரண்டாக,மட்டதாளம் முதல் நிலையாக,ஏகதாளம் இறுதி நிலையாக,’வைசாக’ நிலையில் நடனம் ஆடினாள்.
பொன்னின் இயல்புகள் அமைந்த பூங்கொடி அரங்கத்தில் வந்து நடனமாடியது போல,நாட்டியம் பற்றிய சிறந்த நூல்களில் கூறப்படும் தகுதிகளெல்லாம் நன்றாக கடைபிடித்து,அனைவரும் காண மாதவியும் அரங்கிலே ஆடினால்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]