அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்
11.இசை முழக்கம்
(அந்தரக் கொட்டாக இசை கருவிகள் முழங்கிய விதம்)
குழல்வழி நின்றது யாழே யாழ்வழித் தண்ணுமை நின்றது தகவே தண்ணுமைப் |
140 |
பின்வழி நின்றது முழவே முழவொடு கூடிநின் றிசைத்த தாமந் திரிகை ஆமந் திரிகையோ டந்தர மின்றிக் கொட்டிரண் டுடையதோர் மண்டில மாகக் கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி |
145 |
வந்த முறையின் வழிமுறை வழாமல் அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர் |
குழலிசை எழுகின்ற வழியே யாழ் இசைத்தது;
யாழின் வழியே தண்ணுமை இசைத்தது;
தண்ணுமையின் வழியே முழவு இசைத்தது;
முழவோடு கூடிநின்ற ஆமந்திரிகை இசைத்தது,
இவ்வாறு ஆமந்திரிகை என்னும் இடக்கை வாத்தியமும் மற்ற எல்லா இசைக்கருவிகளும் கூடி இடைவெளியின்றி ஒன்றாக ஒலித்தன.
ஒரு தாளத்திற்கு இரண்டு பற்றாக,பஞ்சதாளப் பிரபந்தம் கட்டப்பட்டது.அத்துடன் தீர்வு ஒரு பற்றும் சேர்ந்து பற்று பதினொன்று ஆனது.இங்ஙனம் பதினொன்று பற்றாலே முடிப்பது ‘தேசிக் கூத்து’ என்பது நாடக நூல்கள் சொல்லும் மரபு.இவ்வாறு விதிமுறைகள் யாவும் வழுவாமல் அந்தரக் கொட்டுடன்,இசை முழக்கமும் ஒன்றாக ஒலித்தது.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]