அரங்கேற்று காதை - சிலப்பதிகாரம்
10.வாரப்பாடல்
(தன் நடன நிகழ்ச்சிக்கு மாதவி வந்த மரபையும்,தெய்வ வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது பற்றியும் விவரிக்கு பகுதி)
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின் குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப |
130 |
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து வலத்தூண் சேர்தல் வழக்கெனப் பொருந்தி இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த தொன்னெறி இயற்கைத் தோரிய மகளிரும் சீரியல் பொலிய நீரல நீங்க |
135 |
வாரம் இரண்டும் வரிசையிற் பாடப் பாடிய வாரத்து ஈற்றின்நின் றிசைக்குங் கூடிய குயிலுவக் கருவிக ளெல்லாங் |
அரசன் முதலிய அனைவரும் அவரவர் தகுதிக்கேற்ப அமைத்த இருக்கைகளில் முறையாக அமர்ந்தனர்.இசைக்கருவிகளை இசைப்பவர் அவர்களுக்குரிய இடத்தில அரங்கில் முறைப்படி நின்றனர்.நடனம் ஆட வந்த மாதவியும் தன் வலதுகாலை முன் வைத்து அரங்கில் ஏறினாள்.’அரங்கத்தின் வலதுப் பக்கத் தூணின் அருகே ஆடுபவள் நிற்கவேண்டும் என்னும் வழக்கப்படி,மாதவி அவ்விடத்தே சென்று நின்றாள்.பழைய முறைகளின் இயற்க்கைகள் அனைத்தும் அறிந்த அனுபவமுள்ள நடன மகளிர்,முறைப்படி இடத்தூண் அருகே சென்று நின்றனர்.நன்மைகள் பெருகவும்,தீமைகள் அறவே நீங்கவும்,ஓரொற்று வாரப்பாடல்களும் ஈரொற்று வாரப்பாடல்களும் முறையாக பாடினர்.வாரப்பாடல்களின் இறுதியில்,இசைக்கும் இசைக்கருவிகள் அனைத்தும் முழங்கின.
தேடல் தொடர்பான தகவல்கள்:
அரங்கேற்று காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]