மனையறம் படுத்த காதை - சிலப்பதிகாரம்
8.தனிமனை புகுதல்
(கோவலனும்,கண்ணகியும் தனிமனை புகுந்து,இனிய இல்லறம் கண்ட காட்சியை விளக்கும் பகுதி)
உலவாக் கட்டுரை பலபா ராட்டித தயங்கிணர்க் கோதை தன்னொடு தருக்கி வயங்கிணர்த் தாரோன் மகிழ்ந்துசெல் வுழிநாள வாரொலி கூந்தலைப் பேரியற் கிழத்தி மறப்பரும் கேண்மையோ டறப்பரி சாரமும் |
85 |
விருந்து புறந்தரூஉம் பெருந்தண் வாழ்க்கையும் வேறுபடு திருவின் வீறுபெறக் காண உரிமைச் சுற்றமோ டொருதனி புணர்க்க யாண்டுசில கழிந்தன இற்பெருங் கிழமையிற் காண்டகு சிறப்பிற் கண்ணகி தனக்கென். |
90 |
இன்னும் இன்னும் பல முடிவில்லாத பாராட்டுகளை நவின்றான்,கோவலன்.பூமாலை அணிந்து ஒளிர்கின்ற கண்ணகியும்,தாரினை அணிந்த கோவலனும் இன்பத்தில் திளைத்தன.இப்படி தன் மனைவியான கண்ணகியுடன் கோவலன் இல்லறம் பேணி வந்த அக்காலத்தே,ஒரு நாள்…
நீண்டு தழைத்த கூந்தலையும்,பெருந்தன்மையான பண்புகளையும் உடையவள் கோவலனின் அன்னை.தம்பதியர்,சுற்றத்துடன் இணைந்து வாழ்தல்;துறவியரை பேணுதல்;விருந்தினரை உபசரித்தல் ஆகிய பெருமைகளுடன்,இல்வாழ்க்கையும் சிறப்புப் பெற்று,மென்மேலும் பல்வேறு செல்வங்களும் பெற விரும்பி,அவர்களைத் தனிக் குடும்பமாக அமர்த்த எண்ணினாள்.அவர்களுக்கு வேண்டிய வசதிகளுடனும்,பணியாட்களுடனும், அவர்கள் தனிக் குடும்பம் நடத்த ஏற்பாடு செய்தார்.
தம்பதியரும்,அவ்வாறே தனிமனை புகுந்து,இன்புற்று வாழ்ந்தனர்.கண்ணகி பேணிய இல்லறப் பாங்கினை கண்டவர் பாராட்ட,ஆண்டுகள் சில கழிந்தன……
.
வெண்பா
தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார் காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந் தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல் நிலையாமை கண்டவர்போல் நின்று. |
‘உலக வாழ்கையில் நிலையாமை உறுதி’,என்ற உண்மையை அறிந்தவர் போல,தம்முள் பிரிதலின்றி இணைந்து இன்புற்று வாழ்ந்தனர்.சினத்துடைய பாம்புகள் ஒன்றோடொன்று பிணைந்து தழுவிப் பிரியாது இருப்பது போலவும்,காமனும் ரதியும் ஒருவரோடொருவர் பிரியாது தழுவி கிடந்தது போலவும்,இன்பங்கள் முழுதும் துய்த்திடும் நோக்கில்,மனம் ஒன்றி கலந்தவராக வாழ்ந்து வந்தனர்.
மனையறம் படுத்த காதை முற்றிற்று.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனையறம் படுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]