மனையறம் படுத்த காதை - சிலப்பதிகாரம்

6.அணிகலன்கள் வேண்டுமோ!
(கோவலன்,கண்ணகியின் இயற்க்கை அழகை விவரிக்கும் பகுதி)
நறுமலர்க் கோதைநின் நலம்பா ராட்டுநர் மறுவின் மங்கல வணியே யன்றியும் பிறிதணி யணியப் பெற்றதை யெவன்கொல் பல்லிருங் கூந்தற் சின்மல ரன்றியும் |
65 |
எல்லவிழ் மாலையொ டென்னுற் றனர்கொல் நானம் நல்லகில் நறும்புகை யன்றியும் மான்மதச் சாந்தொடு வந்ததை யெவன்கொல திருமுலைத் தடத்திடைத் தொய்யி லன்றியும் ஒருகாழ் முத்தமொ டுற்றதை யெவன்கொல |
70 |
திங்கண்முத் தரும்பவுஞ் சிறுகிடை வருந்தவும் இங்கிவை யணிந்தன ரென்னுற் றனர்கொல |
நறுமண மலரினை சூடிய கோதையே!
நின்னைப் புனைந்து அழகு செய்யும் மகளிர்,குற்றமற்ற மங்கலமான நின் இயற்கை அழகு இருக்க,நின் மாங்கல்ய அணி மேலும் அழகு சேர்த்திருக்க,
இன்னும் பல அணிகலன்களை உனக்கு அணிவித்தது ஏன்?
பல்வகைத் தோற்றம் கொண்டு பொலிகின்ற நின் கருங்கூந்தலுக்குச் சில மலர்கள் மட்டும் சூட்டினால் போதும் என்றிருக்க,
ஒளியுடைய அவிழ்கின்ற மாலையையும் சூட்டியிருக்கின்றனரே!அம்மாலையோடு அவர்களுக்கு என்ன உறவோ?
நின் கூந்தலை மணமாக்க அகிற்புகையின் நறுமணமொன்றே போதும் என்றிருக்க,
வாசனையூட்ட வேண்டிக் கஸ்தூரிக் குழம்பு கொணர்ந்தனரின் உள்நோக்கம் தான் என்ன?
அழகுத்திரு மார்புகளுக்கு அணி செய்திட,தீட்டிய கோலங்களே போதும் என்றிருக்க,
முத்து வடம் கொணர்ந்தவர்க்கு,அதனுடனுள்ள உரிமை தான் என்ன?
மதி போன்ற நின் முகத்தில் முத்து முத்தாய் வியர்வை அரும்பிடவும்,சிறிதான நின் இடை துவண்டு வருந்திடவும்,மென்மேலும் உன் மீது அணிகலன்கள் பூட்டுகின்றனரே,இவர்களுக்கு என்னதான் நேர்ந்தது?
தேடல் தொடர்பான தகவல்கள்:
மனையறம் படுத்த காதை - புகார்க் காண்டம் - சிலப்பதிகாரம் - Aimperum Kappiyangal - ஐம்பெருங் காப்பியங்கள் - [kyx]